தேசிய பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனு உயர்நீதிமன்றினால் தள்ளுபடி



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் மூலம், தோல்வியடைந்த வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்றை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
போரசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் உள்ளிட்ட நீதியரசர்கள் அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய இந்த மனு மீதான வழக்கு விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது உயர்நீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்தனர்.
தோல்வியடைந்தவர்கள் முன்னணியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.