இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று (13) வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கியமாக ஆலோசனை மேற்கொண்டதாக இந்திய ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இருநாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு, பிரதமர் மோடி நேற்று இரவு விருந்து அளித்துள்ளார்.
இதன்போது இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் இதன்போது ஆலோசித்துள்ளனர்.
மேலும், இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்து வருவதாக இந்தியப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தவிர இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், இரு நாடுகள் இடையிலான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டதாக இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
"இந்திய-இலங்கை உறவு மிகவும் சிறப்பானது. இனி வரும் காலத்தில் இந்த உறவு மேலும் வலுப்படும்´ என்று தெரிவித்துள்ளார்