(க.கிஷாந்தன்)
மலையகத்தில் பல பாகங்களில் மாலை வேளைகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு அட்டன் மற்றும் நுவரெலியா பிரதான வீதிகளில் பனிமூட்டம் அதிகமாக சூழ்ந்து காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
13.05.2016 அன்று மாலை அதிகமாக முகில்கூட்டம் நிறைந்து காணப்பட்டதனால் சாரதிகள் வாகனங்களில் மின் விளக்குகளை (ஹெட்லைட்) எரிய விட்டு வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

