நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை May 19, 2016 நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். Slider, Sri lanka