மின்னல் தாக்கத்தால் இருவர் வைத்தியசாலையில்



(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் 31.05.2016 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது குறித்த தோட்ட பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் அப்பகுதியில் பணிப்புரிந்துக்கொண்டிருந்த இரு ஆண்கள் அதிர்ச்சியடைந்த  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.