வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட, அரசாங்கத்தின் முன்னாள் உயர் அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கம்பஹா பகுதியிலுள்ள காணி ஒன்று தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கைதானவர்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர்களான விலி கமகே மற்றும் ஏ.தஸநாயக்க என பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவர்களை கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

