சூரியனை கிரகம் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மாலை சூரியனில் கரும்புள்ளி ஒன்று தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். அதன்படி, 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் நிகழவுள்ளது.
இதனை இலங்கை, இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பார்க்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி மாலை 4.15 முதல் 6.20 வரை இதனை அவதானிக்கலாம். அத்துடன் இதனை வெற்றுக் கண்களினால் பார்க்ககூடாது எனவும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

