நாட்டின் விவசாய பொருளாதாரத்தை அரசாங்கம் சீர்குலைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களை தாக்கியோ அவர்களை இழிவுபடுத்தியோ நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், பெரும்பான்மையான மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணர்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் விவசாயத்துறைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதனையும் செய்யவில்லை என்றால் அது பற்றி தாம் ஆச்சரியமடையப் போவதில்லை என்ற போதிலும் ரஜரட்டவைச் சேர்ந்தவர் விவசாய அமைச்சராக இருந்த போதிலும் விவசாயிகள் உதாசீனம் செய்யப்படுவதே வருத்தமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஆட்சியிலிருந்த காலத்தில் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கப்பட்டது, ஆனால்
தற்போதைய அரசாங்கம் நாட்டின் விவசாயத்தை மிகவும் மோசமான முறையில் சீர்குலைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் விவசாயத்தை மிகவும் மோசமான முறையில் சீர்குலைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

