தலசீமியா சிகிச்சை இயந்திரம் ஜனாதிபதியால் கையளிப்பு



கடற்படையினால் தயாரிக்கப்பட்ட தலசீமியா நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தும் மருந்து பயன்பாட்டு இயந்திரமொன்று கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
மே 11 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தலசீமியா தினத்தை முன்னிட்டு இந்த உபகரணம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 5 சிறுவர்களுக்கு ஜனாதிபதியினால் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இலங்கை கடற்படை உறுப்பினர்களின் மாதாந்த சம்பளத்தில் 75 ரூபா வீதம் சேமித்து சமூக சேவையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் ஆர்.சீ விஜேகுணரத்னவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.