சம்­மாந்­துறை ஆலய உடைப்பு; விவ­காரம் மன­நோ­யாளி கைது




சம்­மாந்­துறை ஆலய உடைப்பு; விவ­காரம் 
மன­நோ­யாளி கைது 
(காரை­தீவு நிருபர்)
சம்­மாந்­துறை கோரக்­கர் ­கி­ராம அகோ­ர­மா­ரி­யம்மன் ஆலய உடைப்பு விவ­காரம் தொடர்­பாக சம்­மாந்­து­றை­யைச்­ சேர்ந்த மன­நோ­யாளி ஒருவர் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
சம்­மாந்­துறைப் பொலிசார் இவரை சனிக்­கி­ழ­மை­யன்று பகல் கைது­செய்­தனர்.
வெள்ளி அதி­காலை ஆலயம் தாக்­கப்­பட்­டமை தெரிந்­ததே. அன்றே ஆலய நிர்வா­க­சபைத் தலைவர் ம.பால­சுப்­பி­ர­ம­ணியம் தலை­மை­யி­லான நிர்­வா­கத்­தினர் இத்­தாக்­குதல் தொடர்பில் சம்­மாந்­து­றைப் ­பொ­லி ஸில் முறைப்­பாட்டை பதி­வு­செய்­தி­ருந்­தனர்.
ஆலய நிர்­வா­கத்­தி­னரை சனி­யன்று மாலை அழைத்த சம்­மாந்­துறைப் பொலிஸ்­நி­லையப் பொறுப்­ப­தி­காரி உபுல் பியலால் சந்­தே­க­ந­பரைக் காட்­டினார்.இவர் 24வயது மதிக்­கத்­தக்க முஸ்லிம் இளை­ஞ­ராவார்.
அவர் கைது­ செய்­யப்­ப­டும்­போது அவ­ரி டம் ஆல­யத்­திற்­கான திரு­விழா நோட்டிஸ் ஆல­யத்தின் 2006ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்ட அறிக்கை, ஆல­யத்­திற்­கான மின்­சா­ர­கட்­டண பட்­டியல் போன்­றன இருந்­துள்­ளன. இடுப்பில் சாமிக்குக் கட்டும் பட்­டுச்­சீலை சொரு­கி­யி­ருக்க காணப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.
குறிப்­பிட்ட ஆவ­ணங்கள் ஆல­யத்­தி­லி­ருந்­ததை நிர்வா­கத்­தினர் ஊர்­ஜிதம் செய்­தனர்.
அவரை இன்று நீதி­மன்றில் ஆஜர் செய்­ய­வி­ருப்­ப­தா­கவும் அவர் ஆலய நிர்­வா­கத்­திடம் தெரி­வித்தார். ஆல­யத்­திற்­கேற்­பட்ட சேதம் தொடர்­பாக நிர்வா­கத்­தினர் சுட்­டிக்­காட்­டினர். மேலும் மன­நோ­யா­ளி­யொ­ருவர் ஆலய விக்­கிர­கங்­களை உடைத்­தி­ருக்­கலாம். ஆனால் மிகவும் பக்­கு­வ­மாக மண்­மேடை அமைத்து அதில் மிகவும் நேர்த்­தி­யாக இலக்­கங்­க­ளு­டன்­ கூ­டிய எழுத்­துக்­களை எழு­தி­யி­ருப்­பாரா? என்­பது தொடர்பில் சந்­தே­க­மி­ருப்­ப­தாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரிலேயே மனநோயாளி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தாக் குதல் தொடர்பில் விரிவான விசாரணை தொடர்கிறது என்றார்.