ஹிகுரான்கொடவில் விமானம் விபத்து




விமானப் படைக்குச் சொந்தமான பெல் 206 வகை விமானம் ஹிகுரான்கொட விமானப் படை முகாமில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பயிற்சி நடவடிக்கைகளின் பின்னர் குறித்த விமானத்தை தரையிறக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் சம்பவத்தில் பைலட் உயிர் தப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.