முச்சக்கரவண்டி குடைசாய்ந்தது



மட்டக்களப்பு புதுப்பாலம் பகுதியில்   28.05.2016 சனிக்கிழமை  முச்சக்கரவண்டி வாவிக்குள் குடைசாய்ந்து விழுந்ததில்இருவர் காயமடைந்த காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி  வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  வீதியை விட்டு விலகி வாவிக்குள் விழுந்துள்ளது.
கொம்மாதுறை கிராமத்தைச் சேர்ந்த எஸ். பற்குணம்  (வயது 45) சனிக்கிழமை காலை  செங்கலடியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு தமது கடமை நிமித்தம்  செல்லும் வழியிலே   இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவரும் அவருடன் பயணித்த சகோதரனுமே காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்