மின் கம்பி அறுந்து விழுந்தது



(க.கிஷாந்தன்)

சீரற்ற காலநிலை 17.05.2016 அன்று 3வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் 17.05.2016 அன்று மழையுடன் கூடிய காற்றும் வீச ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம குப்பை கூழ பகுதிக்கருகில் வீசிய காற்றினால் மின் கம்பி ஒன்று அறுந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக இவ்வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரமாக தடைப்பட்டுள்ள போக்குவரத்தை சீரமைப்பதற்காக இலங்கை மின்சார சபையின் உதவியைக் கொண்டு மின் கம்பியை அகற்றி போக்குவரத்தை சீர்ப்படுத்த அட்டன் பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.