முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கும் ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாய சட்டமாக்கும் நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதைப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி விபத்துக்களின் போது ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்கு இதன் மூலம் வழிவகுக்கும் என பாதைப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் வைத்திய அதிகாரி சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த நாட்களில் இடம்பெற்ற பெரும்பாலான முச்சக்கர வண்டி விபத்துக்களில் அதன் சாரதியும் அதில், பயணம் செய்த பலரும் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
