முல்லைத்தீவு விகாரையை அகற்றுமாறு விக்னேஷ்வரன் கோரிக்கை



முல்லைத்தீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் சம்போதி விகாரையை அகற்றுமாறு கோரி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கோகிலாய் கடலோரப் பிரதேசத்தில் காணப்படும் சிங்கள கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த விகாரை, ஒரு சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும் என அந்த கடிதத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விகாரையை அமைத்துவரும் பௌத்த பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் கோரியுள்ளார்.
இந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய சிங்கள தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.