தடை செய்யப்பட்ட ஒரு வகை மீனினமான முத்துச் சுறாவினை அதிகாலையில் ஒலுவில் துறைமுகக் கடலில் மீனவா்கள் பிடித்துள்ளனர். இவர்களுக்கு முத்துச்சுறா மீன் தடை செய்யப்பட்ட விலங்கினம் என்று தெரியாது என்பதாகவும் வழக்கம் போல வலை வீசும் போது இது அகப்பட்டதாகவும் சாய்ந்தமருதினைச் சேர்ந்த குற்றவாளிகள் இன்று அக்கரைப்பற்று நீதிமன்றில் தெரிவித்தனர்.
குறித்த குற்றவாளிகள் மூவருக்கும் தலா 5000/- வீதம் அக்கரைப்பற்று நீதவான் நளினி கந்தசாமி அவர்களினால் விதிக்கப்பட்டது.

