மண் சரிவு ஏற்பட்டுள்ள அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிபுர, எலகபிடிய மற்றும் பல்லேபாகே ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 80 பேர் தற்பொழுது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனர்த்தம் இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ளவர்களைக் காப்பாற்றும் பணியில் 150 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மண்சரிவினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. சுமார் 150 குடும்பங்கள் இந்தப் மூன்று கிராமங்களிலும் காணப்படுவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


