களனி கங்கையில் நீர் குறைகிறது



கொழும்பு மாவட்டத்தில் களனி கங்கையின் நீர் மட்டம் நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 07.00 மணியளவில் நாகலன்கமுவ பகுதியில் நீரின் கொள்ளளவு 7.2 அடியாக இருப்பதுடன் நேற்று அது 7.65 அடி அளவுக்கு இருந்தது. 

ஹங்வெல்ல மற்றும் ஹங்வெல்ல மேல் பிரிவுகளில் நீர் மட்டம் குறைந்திருப்பதாக கொழும்பு மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் கே.ஜீ. பத்மகீர்த்தி கூறினார். 

எவ்வாறாயினும் நீர் வடிந்தோடும் நிலை இன்னும் தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.