அவசர அனர்த்தங்களா? உடன் தொடர்பு கொள்ளுங்கள்-பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு



நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலையினால் அவசர அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதாயின் உடனடியாக மீட்பாளர்களுக்கு அறியத்தருமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மீட்பாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான பின்வரும் இலக்கங்களையும் அமைச்சு வெளியிட்டுள்ளது. 
இராணுவ செயற்பாட்டுப் பிரிவு 0112434251, 
கடற்படை செயற்பாட்டுப் பிரிவு  0112-445368, 0112-212230, 
விமானப்படை பிரிவு 0112-343970, 0112-343971
என்பவற்றுடன் தொடர்புகொண்டு அவசர அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள சிரமம் ஏற்படும் போது, அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பவற்றுடன் தொடர்புகளை மேற்கொண்டு அறிவிக்கலாம் எனவும் அவ்வமைச்சு பொது மக்களிடம் கேட்டுள்ளது.