நோயாளர்களை பழிவாங்குவது நியாயமல்ல



அப்பாவி உதவியற்ற நோயாளர்களை கஷ்டங்களுக்குள் உட்படுத்தும் வகையில் அரச வைத்தியர்கள் சங்கம் தங்களது தொழில் உரிமைகளுக்காக திடீர் வேலை நிறுத்தங்களுக்கு செல்வது நியாயமற்றது என மின்சக்தி, எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் போது சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இறுதியில் எடுக்கும் நடவடிக்கையை ஆரம்பத்தில் கைக்கொள்வது அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்த கட்டமாக அப்பாவி நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.இன்று அரச வைத்தியர்கள் சங்கம் மேற்கொள்ளவுள்ள வேலை நிறுத்தத்தை முன் வைத்து இவரது இக் கருத்து வெளியாகின்றது.