மன உளச்சலுக்கு மருந்தாகுமா ''அதிசய காளான்'' ?



தடை செய்யப்பட்ட''அதிசய காளான்'' என்று அறியப்படும் போதை மருந்தில் இருந்து பெறப்படும் ஒரு மயக்கமூட்டும் கலவை மன உளச்சலில் இருப்பவர்களை குணப்படுத்த உதவுக்கூடும் என்று ஒரு பிரிட்டன் ஆய்வு கூறுகிறது.
லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.
எந்த வித சிகிச்சையும் பலனளிக்காத நிலையில் அந்த நோயாளிகள் இருந்தனர்.
அரசால் அனுமதிக்கப்பட்ட சிலோசைபின் (psilocybin) ரசாயன மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன.
ஒரு வாரத்திற்குப் பிறகு, 12 பேரின் மன அழுத்த அறிகுறிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன.
ஆனால் மாத்திரையின் குணப்படுத்தும் பலன்கள் குறித்து வலுவான முடிவை எடுக்க முடிவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சிலோசைபின் ஏற்படுத்திய விளைவை மருத்துவர்கள் நோயாளிகளின் மனத்திருப்திக்காக தரும், ஆனால் உண்மையில் பலனளிக்காத மருந்துகளுடன் ஒப்பிடமுடியாது என்றும் கூறினார்.