எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கையரானார் ஜயந்தி




8848 மீற்றர் (29,029 அடி) உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஜயந்தி கரு உத்தும்பொல இன்று சனிக்கிழமை அடைந்துள்ளார்.

மற்றொரு இலங்கையரான ஜொஹன் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மலையேறிகள், 4 வழிகாட்டிகள், 15 ஷேர்பா உதவியாளர்கள் கொண்ட குழுவொன்றில் ஓர் அங்கத்தவராக இணைந்து ஜயந்தி கரு உத்தும்பொல இப்பயணத்தை மேற்கொண்டார்.