அனர்த்த முகாமைத்துவத்துக்கு விசேட செயலணி



அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும்  அனர்த்த முகாமைத்துவத்தை இன்னும் பலப்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி உத்தரவின் பேரில் விசேட செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோனின் தலைமையில் இயங்கவுள்ளது.
முற்றாக சேதமடைந்த வீடுகளை நிர்மாணித்தல், தொழில் மற்றும் ஜீவனோபாய வசதிகளை மீள் கட்டமைத்தல், அனத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தல் மற்றும் சுகாதார பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் என்பன தொடர்பில் இச்செயலணி கவனம் செலுத்தவுள்ளது.
இச்செயலணியின் முதலாவது கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.