பாதாள சாக்கடையில் விழுந்த யானைக்குட்டி மீட்பு May 29, 2016 இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை பகுதியில், சிறிய கழிவு நீர் சாக்கடையில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை மீட்டெடுத்துள்ளனர். குட்டி யானை இந்தக் குழியில் விழுந்ததையடுத்து அதன் அருகில் வர முயன்ற தாய் யானை, வெடி வைத்து விரட்டப்பட்டது. பெரும் முயற்சிக்கு பிறகு குட்டி யானை வெளியே கொண்டு வரப்பட்டது. காப்பாற்றப்பட்ட குட்டி யானையின் கால்கள் உடைந்திருக்கலாம் என கருதப்பட்டமையால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment