அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் மட்டம் 19.11 அடிவரை உயர்வடைந்துள்ளதாகவும், அது 23 அடி வரை உயர்வடைந்தால் அதனை மூடுவதற்கு நேரிடும் என்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
களனி ஆற்றின் நீர் மட்டத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஆகையால் தற்போதைய நிலையில் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்குறிய அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூடப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மையற்றது என அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதி பொது முகாமையாளர் ரஞ்சித் பெரேரா கூறினார்.

