(படம் – (க.கிஷாந்தன்)
தேசிய வீடமைப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செமட செவன வீடமைப்புத்திட்டத்தின் கீழ் கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள தனிவீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 30 ஆம் திகதி இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், இரா.இராஜாராம், சிங்காரம்பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் செ. பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதை இங்கு காணலாம்.

Post a Comment
Post a Comment