வசீம் தாஜுதீன் கொலை – முன்னாள் DIG அனுர சேனநாயக கைது



முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சற்றுமுன்னர் கைதுசெய்துள்ளனர்.
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் கொலை தொடர்பிலேயே அவர் இவ்வாறு விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வசீம் தாஜுதீன் மரணித்த காலப் பகுதியில் கொழும்பிற்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபராக இவர் பதவி வகித்திருந்தார்.
கடந்த 2012ம் ஆண்டு மே 17ம் திகதி இடம்பெற்ற தாஜூடினின் மரணத்தை சாதாரண விபத்தாக முன்னர் உறுதிப்படுத்தியிருந்தனர்.
எனினும் சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு வருடங்களின் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் இது குறித்த விசாரணைகளை மீள ஆரம்பித்து குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது