இங்கிலாந்துக்கு 287 வெற்றி இலக்கு




இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 286 ஓட்டங்களைப் பெற்று 09 விக்கட்டுக்களை இழந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறுகின்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அபாரமாக ஆடிய மெத்திவ்ஸ் 73 ஓட்டங்களையும், சீக்குகே பிரசண்ண 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

எனவே 287 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.