#சீனா: பேருந்து விபத்து 30 பேர் பலி



சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகி, பின்னர் தீ பற்றி எரிந்ததில் குறைந்தது 30 பேர் இறந்துள்ளனர்.
50-க்கு மேலானோரை ஏற்றி சென்று கொண்டிருந்த அந்த பேருந்து பிரதான சாலை ஒன்றின் பாதுகாப்பு கம்பியின் மேல் மோதி விபத்திற்குள்ளானது.
எண்ணெய் கசிவால் பின்னர் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் கருதப்படுகிறது.
ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளது.