5கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது



5 கிலோ கிராம் ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டோஹாவில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபரிடம் இருந்து இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இதற்கு முன்னரும் குறித்த சந்தேக நபர் நாட்டிற்கு போதைப் பொருள் கொண்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது .
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி சுமார் 5கோடி ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் கண்காணிக்கப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.