சுங்க அதிகாரிகளை ஏமாற்றியவருக்கு 6 கோடி 55 லட்சம் அபராதம்



பாரிய இயந்திரமொன்று எனக் குறிப்பிட்டு சுங்கத்திணைக்கள அதிகாரிகளை ஏமாற்றி, நவீன ரக ஜீப் வண்டியொன்றையும், மோட்டார் வாகனங்கள் இரண்டையும் இலங்கைக்கு இறக்குமதி செய்ததாக கூறப்படும் வர்த்தகர் ஒருவருக்கு ஆறு கோடி 52 லட்சம் ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வர்த்தகர் நயவஞ்சகத்தனத்துடன் சுங்க அதிகாரிகளை ஏமாற்ற முயற்சி செய்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் சூலாநந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.