இலங்கையிலேயே வருடத்திற்கு அதிகமான விடுமுறைநாட்கள் விடப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயமே….
இந்நிலையில் 2017ம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில், 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே கருத்து வெளியிட்டிருந்தனர்.


Post a Comment
Post a Comment