சமூக வலைதளங்களில் அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை



இஸ்தான்புல்லில் உள்ள நீதிமன்றம் ஒன்று துருக்கி அதிபர் எர்துவானை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் மிஸ் துருக்கி ஒருவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. நிறுத்மெர்வ் புயுக்சரக் என்கிற அந்த 27 வயது மாடல் அழகி மீது அரசு அதிகாரியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்த பதிவுகளுக்காக அவர் மீது இத்தகைய வழக்கு போடப்பட்டுள்ளது.
அதில் அவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்ட நையாண்டி தனமான கவிதையும் அடங்கும்.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து முறையான ஆட்சேபணையை பதிவு செய்யப்போவதாகவும் மேலும் ஐரோப்பிய நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கு மேல் முறையீடு செய்யப்போவதாகவும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அதிபர் எர்துவான் 2014 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற காலத்திலிருந்து இதுவரையில், இதற்கு முன்பாக அதிகம் உபயோகத்தில் இல்லாத ஒரு சட்டத்தின் கீழ், கிட்டதட்ட 2000 அவதூறு வழக்குகளை தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.திவைக்கப்பட்ட 14 மாத சிறைத்தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.