(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை தோட்டத்தில் பலத்த காற்று வீசியதன் காரணமாக பழமைவாய்ந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கோவில், தனியார் நிறுவனத்தின் இரண்டு கட்டிடங்கள், வீடுகள் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோட்டர் சைக்கிள் இரண்டும் சேதமாகியுள்ளது. இதில் கோவில் மற்றும் கட்டிடம் ஒன்றும் முற்றாகவும், மேலும் கட்டிடம் ஒன்றும் இரண்டு வீடுகள் மற்றும் வாகனங்களும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
23.06.2106 அன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் கட்டிடங்கள் மற்றும் ரோதமுனி ஆலயம் என்பன முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக அதிக வலு கொண்ட மின்சார கம்பங்களும் உடைந்து விழுந்துள்ளது. இதனால் இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு திருத்த பணிகளை அட்டன் மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பழமைவாய்ந்த மேற்படி மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் அட்டன் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

