பிரிட்டனில் பெரும்பான்மை வாக்காளர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்துடனான 43 ஆண்டு கால உறவை முடிவுக்குக் கொண்டுவர வாக்களித்திருக்கிறார்கள் என்று பிபிசி இப்போது கணித்திருக்கிறது.
பெரும்பான்மையான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், வாக்களித்தவர்களில் 52 சதவீதத்தினர் , பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற தரப்பு லண்டனிலும், ஸ்காட்லாந்திலும் பெரும்பான்மையைப் பெற்றது ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் , ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகவேண்டும் என்ற தரப்புக்கே ஆதரவு கிடைத்திருக்கிறது.
பிரிட்டன் இப்போது முன்பு பயணிக்காத பாதையில் செல்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரனுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கூறினார்.#European Union #EU

