மணிரத்னத்துக்கு இன்று பிறந்த தினம்



இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் மணிரத்துக்க வாழ்த்துக்கள்!
திரையில் மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 21956) அவர்களின் இயற்பெயர் கோபால ரத்தினம் சுப்ரமணியம் என்பதாகும். இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவர் இவர்.
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.
இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.

இவரது வெற்றித் திரைப்படங்களில் சில[தொகு]