போலி நாணயத்தாள் புனை கதை கூறியவர் கைது



இரண்டாம் இணைப்பு
போலி நாணயத்தாள் விவகாரம் மேலும்இருவர் கைது
யாழ்.மனிப்பாய் பகுதியில் போலி நாணய தாள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவத்தில்இன்றைய தினம் காலை பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரும்கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு புலனாய்வுதுறை பொலிஸார் கூறியுள்ளனர்.
மானிப்பாய் பகுதியில் 2 லட்சம் ரூபாய் போலி நாணய தாள்களை திருமண மண்டபம்ஒன்றுக்கு வழங்கிய நிலையிலேயே மேற்படி போலி நாணய விடயம் வெளிச்சத்திற்குவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக குற்றத் தடுப்பு புலனாய்வுதுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மேற்படி போலி நாணய தாளைதயாரித்த பெண் திருமணத்திற்காக வந்த 4 லட்சத் தி 95 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2லட்சம் ரூபாய் பணத்தை களவாடிய பின் அந்த பணத்திற்காக போலி நாணய தாள்களைதயாரித்து வைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்காக 5 ஆயிரம் ரூபாய்பெறுமதியான 40 தாள்களை யாழ்.நகரில் உள்ள பிரபல்யமான அச்சகத்தில் பாடசாலை தேவைஎன கூறி அச்சிட்டுள்ளார் எனவும் தெரிவித்த பொலிஸார்.
குறித்த பணம்அச்சிடப்பட்ட பிரபல அச்சகத்தில் பணத்தை அச்சிட்டு கொடுத்த பெண் ஊழியர்ஒருவரையும் அச்சகத்தின் உரிமையாளரையும் தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார்கூறியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ்.மானிப்பாய் பகுதியில் வங்கி ஒன்றின் ஊடாக போலி நாணய தாள்கள்கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பொலிஸ் புலனாய்வுபிரிவு கண்டறிந்துள்ளதுடன், குறித்த நாணய தாள்களை பெண் ஒருவர் அச்சிட்டு வங்கியில்இருந்து எடுத்துக் கொண்ட பணத்திற்குள் வைத்திருப்பதாகவும் கண்டறிந்திருக்கின்றனர்.
நேற்றைய தினம் யாழ். மானிப்பாய் பகுதியில் திருமண வீடு ஒன்றுக்காக தனியார் வங்கிஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தொகை பணத்தினை திருமண மண்டபத்திற்குகொடுத்த போது திருமண மண்டபத்தில் இருந்தவர்களால் அந்தப் பணம் போலி பணம் என்பதுகண்டு பிடிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் குறித்த பணத்தை தாம் தனியார் வங்கியில்இருந்து எடுத்து கொண்டதாகவும் அது வங்கியிலேயே மோசடி இடம்பெற்றதாகவும் பணத்தை எடுத்துவந்திருந்தவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தொடர் விசாரணைக்கான பொறுப்பு புலனாய்வுபொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்துவந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்த பெண் அந்த பணத்திற்குள் போலி நாணய தாள்களைகலந்து திருமண மண்டபத்திற்கு கொடுத்திருக்கின்றார்.
அவ்வாறு கலக்கப்பட்ட போலிநாணயத்தின் பெறுமதி 2 லட்சம் ரூபாய். மேலும் இவர் மானிப்பாய்- ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்.
மேலும் குறித்த பெண் கடந்த சில தினங்களுக்குமுன்னர் யாழ்.நகர் பகுதியி ல் உள்ள பிரபல்யமான அச்சகம் ஒன்றுக்கு சென்றுஅங்கிருந்தவர்களிடம் தன்னை ஒரு ஆசிரியர் என அடையாளப்படுத்தி பாடசாலை தேவைகளுக்காகதமக்கு பணம் அச்சிட்டு கொடுக்குமாறு கேட்டு பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.
அவ்வாறு அச்சிட்டு பெற்றுக் கொண்டு சென்றவற்றை திருமண மண்டபத்தில்கொடுத்த போது உண்மையான நாணயத்தை காட்டிலும் குறித்த பெண் கொடுத்த போலி நாணயம்வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து மண்டபத்தில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடுகொடுத்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய தினமும் விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிஸார் குறித்தபெண்ணை கைது செய்திருக்கின்றனர்.