சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட உடுவே தம்மாலோக்க தேரரை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னர் விடுக்கப்பட்ட நோட்டிசுக்கு அமைய , தம்மாலோக தேரர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன்போது, சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அவரை 100 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தம்மாலோக தேரரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment