நயினாதீவு கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் மூவர் உயிரிழப்பு



யாழ், நயினாதீவு கடலில் குளித்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளனர்.
கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 20, 21 மற்றும் 22 வயதுடைய மூவரே கடலில் மூழ்கியுள்ளதுடன், இவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக இந்த இளைஞர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நயினாதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.