தலைமைத்துவ பயிற்சி



(க.கிஷாந்தன்)

பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கான செயலமர்வு ஒன்று முதல் கட்டமாக 19.06.2016 அன்று கொட்டகலையில் அமைந்துள்ள இ.தொ.காவின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பங்களிப்போடு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய இந்த செயலமர்வு இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், இ.தொ.காவின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சக்திவேல், பிலிப்குமார், கணபதி கனகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவி அனுஷியா சிவராஜா, இ.தொ.காவின் உபதலைவரும், தொழிற்துறைப் பணிப்பாளருமான அருள்சாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.