சோமவன்ச அமரசிங்கவின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு



காலஞ்சென்ற ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அன்னாரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்காக உறவினர்களிடம் உடலை ஒப்படைக்குமாறு வெலிக்கட பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சோமவன்ச அமரசிங்கவின் உறவினரான மயுர அரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கொழும்பு மேலதிக நீதிபதி ஒகஸ்டா அத்தப்பத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

சோமவன்ச அமரசிங்கவின் உயிரிழப்பில் சந்தேகம் இல்லை என்று வைத்திய பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற உள்ளதுடன், அவரின் உடல் பத்தரமுல்ல, சிங்கபுரவில் உள்ள உறவினரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.