மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (25) சனிக்கிழமை நண்பகல் நண்பர்களாகச் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் சகதிக்குள் மூழ்கியுள்ளார்.
அங்கிருந்த ஏனையவர்கள் இந்த ஆபத்தை அறிந்து சகதிக்குள் மூழ்கியவரைக் கயிற்றைக் கட்டியிழுத்து கரைசேர்த்து கரடியனாறு மாவட்ட வைத்தியசாலைக்குச் சேர்ப்பித்த போதிலும் இடைவழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டமாவடி மீறாவோடையைச் சேர்ந்த நுபீர் முஹம்மத் இர்பாஸ் (வயது 22) என்பவரே மரணித்தவராகும்.
தாருஸ்ஸலாம் கலாபீடத்தில் கல்வி பயிலும் ஓட்டமாவடி-3 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவன் முஹம்மது றிபாஸ் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். ரமழான் கால விடுமுறைக்காக வீடு வந்த இவர், நண்பர்களுடன் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தில் குளிக்கச்சென்ற வேளை இன்று காலை (25.06.2016) நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உம்ரா கடமையை நிறைவேற்றியதுடன், அங்கே தனது பெற்றோரைச் சந்தித்து விட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தாருஸ்ஸலாம் கலாபீடத்தில் இரண்டாவது வருடத்தில் கல்வி கற்ற இவர், ஒரு ஹாபிழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தை வழங்குவானாக.