பொது முயற்சியாண்மை நிலையியல் குழு எனப்படும் கோப் குழுவின் விசாரணைகள் முடிவடையும் வரை மீண்டும் தான் பதவி ஏற்கப்போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் இன்று நிதிச்சபைக்கு அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிதிச்சபைக் கூட்டத்தின் போது மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இதனை அறிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு தொடர்பிலான முறிகள் விநியோகம் குறித்து கோப் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை, இம் மாதம் 30 ஆம் திகதி தனது பதவிக் காலம் நிறைவடைந்தவுடன் மீண்டும் அந்தப் பதவியை ஏற்பதற்கு எதிர்பார்க்கவில்லை என நிதிச்சபைக்கு மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

