கூட்டு எதிர்க்கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள்!



கூட்டு எதிர்க்கட்சியின் மேலும் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்து கொண்டு அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான முயற்சிகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சில மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இவர்களுக்கு பதவிகளையும் எனைய வரப்பிரசாதங்களையும் வழங்க இணங்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியில் தலையீடு செய்வதனை விரும்பாத சிலர் இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவி;க்கப்படுகிறது.