திருகோணமலை கோட்பே மீன்பிடி துறைமுகத்தில் நீண்டநாள் நங்கூரமிடப்பட்டிருந்த மீன்பிடி படகொன்றில் தீ பரவியுள்ளது.
இந்த படகிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் 3 படகுகளும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த படகில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் தீயால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களும் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment