மஹர நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு



கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹர நீதிமன்ற வளாகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வௌ்ளை நிற ஹைபிரிட் காரொன்றில் வந்த சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.