(கோப்புப் படம்)
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக பாதையில் காவற்துறை பிரிவுக்கு சொந்தமான மோட்டார் வாகனத்தில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.
சிலபாம் பிரதேசத்தில் உள்ள தம்பதியினர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கணவர் வாகனத்தை வேகமாக செலுத்த முற்பட்ட போது மோட்டார் வாகனத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இடைநடுவே நின்றுள்ளது.
பின்னர் குறித்த பெண், காவற்துறை பிரிவுக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை பிறந்துள்ளது.


Post a Comment
Post a Comment