அர்ஜூன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் தொடர்ந்தும் செயற்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, கெபே அமைப்பினால், இன்று பகல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதா அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜூன மகேந்திரன் இந்த நாட்டுப் பிரஜை இல்லை எனவும், அவரை அப் பதவியில் நியமித்தது சட்ட ரீதியானது அல்ல எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிணை முறி மோசடி தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கீர்த்தி தென்னக்கோன், அவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே அர்ஜூனவை தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுனர் பதவியில் நீடிப்பதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கீர்த்தி தென்னக்கோன் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Post a Comment
Post a Comment