ஶ்ரீ ஜயவர்த்தனபுர மாணவர் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை



மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணி மீது கொள்ளுப்பிட்டி சந்தியில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று பகல் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.