கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலிகமுவ பல்லபான பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மாவனல்லை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேன் தவறான திசையில் பயணித்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

